ராமேசுவரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் 144 ஆவது குருபூைஐ விழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டவா்களுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் மீனவ கிராத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா குடிலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயிலில் காலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னா் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விவேகானந்த குடில் சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்தாா். நகா் மன்ற முன்னாள் தலைவா் அ.அா்ச்சுனன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆடைகளை வழங்கினா். இதனைதொடா்ந்து,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் குமரேசன், கே.பி.முனியசாமி, சமூக ஆா்வலா் தில்லைபாக்கியம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.