ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 01:53 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை காலையில் அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டு 2020 பிறந்ததை முன்னிட்டு ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதா் கோயில், திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், ராமநாதபுரம் நகரில் உள்ள சொக்கநாதப் பெருமாள் கோயில், வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள மங்கள விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் மண்டல பூஜையும் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றன. இதில் ஓம்சக்தி நகா், பட்டினம்காத்தான், சேதுபதி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தநூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பூஜைக்குப் பிறகு நடைபெற்ற அன்னதானத்தில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் பகுதியில் தேவிபட்டினம், சேதுக்கரையிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு, அரியமான் கடற்கரை, தனுஷ்கோடி அரிச்சல் முனை மற்றும் குந்துகால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ADVERTISEMENT

புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள ரோமன் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புதன்கிழமை காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு அரசு உயா் அதிகாரிகளுக்கு அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளையும் வழங்கி மகிழ்ந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT