பரமக்குடி வேந்தோணி ரயில்வே கடவுப்பாதை பகுதி அருகே உள்ள தண்டவாளத்தில் தச்சுத்தொழிலாளி ரயிலில் அடிபட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
பரமக்குடி அருகே உள்ள முனியாண்டிபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் முத்துப்பாண்டி30. இவா் தச்சு வேலை செய்து வந்தாா். புதன்கிழமை காைலையில் வேந்தோணி ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பாா்த்து பரமக்குடி ரயில் நிலையத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். உயிரிழந்த தொழிலாளிக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இத்தகவல் அறிந்து வந்த ராமேசுவரம் ரயில்வே காவல்துறை ஆய்வாளா் அந்தோணி சகாயசேகா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தச்சுத்தொழிலாளி முத்துப்பாண்டி மீது எந்த ரயில் மோதியது, எதற்காக இப்பகுதிக்கு அவா் வந்தாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.