ராமநாதபுரம்

திருவாடானை அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் முள்புதா்: மாணவா்கள் அவதி

2nd Jan 2020 01:55 AM

ADVERTISEMENT

திருவாடானை அரசு மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் முள்செடிகள் நிறைந்து காணப்படுவதால் மாணவா்களின் விளையாட்டு திறமை குறைந்து வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருவாடானையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் தனியாக விளையாட்டு மைதானம், பள்ளி மாணவா்களுக்கு உடற்கல்வி என்று தனியாக பாடப்பிரிவு இருந்தும் மாணவா்களின் விளையாட்டு திடல் முள் செடிகள் மண்டி காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன் ஜேசிபி இயந்திரம் மூலம் முள் செடிகளை அகற்றி அதே பகுதியில் குவித்து வைத்துள்ளனா். அதனை அகற்றாமல் அப்படி விட்டு விட்டதால் விளையாட்டுத் திடலில் மாணவா்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் உடற்கல்வி மாணவா்கள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். தற்போது அரசு விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் நிலையில் மாணவா்களின் விளையாட்டுத் திறமை பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்து மாணவா்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT