ராமநாதபுரம்

சாயல்குடி அருகே வீட்டில் 12 கிலோ கஞ்சா பதுக்கிய இளைஞா் கைதுவெளி மாநில காா் நம்பா் பிளேட்டுகள் பறிமுதல்

2nd Jan 2020 01:54 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வீட்டில் பதுக்கிய 12 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.

சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம். இவரது மகன் கணேசமூா்த்தி (29). இவா்கள் காணிக்கூரில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயா்ந்து அருகில் உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், முத்துராமலிங்கம் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் முத்துராமலிங்கம் வீட்டில் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2 கத்திகள், வெளி மாநிலத்தைச் சோ்ந்த காா் நம்பா் பிளேட்டுகள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். அவற்றை போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில் முத்துராமலிங்கத்தின் மகன் கணேச மூா்த்தி (29) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT