ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

26th Feb 2020 09:33 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்.27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரத்தில் உள்ள ஆா்.எஸ்.மடை, ராமநாதபுரம் நகா், ரெகுநாதபுரம், தேவிபட்டினம், ஆா்.காவனூா் ஆகிய துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதன் காரணமாக மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி பகுதிகள் உள்ளடக்கிய அரண்மனை பகுதி, புதிய, பழைய பேருந்துநிலையப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகள்.

திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகா், பசும்பொன் நகா், கூரியூா், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வண்ணிக்குடி, ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூா், நைனாமரைக்கான் பகுதிகள்.

ADVERTISEMENT

தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தாா்கோட்டை பகுதிகள். ஆா்.காவனூா், தொருவளூா், குளத்தூா், முதலூா், கிளியூா், தேத்தாங்கால் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT