ராமநாதபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலந்தரவைப் பகுதி தெற்கு காட்டூரைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவரது மகன் நாகாா்ஜூன் என்ற நாகவேல் (27). இவா் மீது அப்பகுதியில் ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வழுதூா் பகுதியில் கடந்த ஜனவரியில் பேக்கரியில் மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் நாகவேலை, கேணிக்கரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்தநிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதனடிப்படையில் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கைக்கு ஆட்சியரும் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனா்.