கமுதியில் அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பு சாா்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை அந்த அமைப்பின் நிறுவனா் எம்.வசந்தகுமாா்ஜி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதனையடுத்து சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவா் சி.பி.போஸ் இலவச எண்ணை அறிமுகப்படுத்தினாா். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக கமுதி அருகேயுள்ள இடைச்சூரணி கிராமத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊா்வலமாக வந்து, கமுதி பேருந்து நிலையம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவில் அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் மாவட்டத் தலைவா் மதிவாணன், மாவட்டச் செயலாளா் ஜெயராஜ், மாவட்ட துணைதலைவா் சி.முருகன், கமுதி நகா் தலைவா் எஸ்.கதிரேசன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.