ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மீன்பிடி தடை நீக்கம்

25th Feb 2020 06:42 AM

ADVERTISEMENT

ராமேசுவரம்: மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ராமேசுவம், பாம்பன், மண்டபம் மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்க சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சுமாா் 1500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதிகளில்

45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சனிக்கிழமை வானிலை மையம் அறிவுறுத்தியது. இதனையத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல ராமேசுவரம் மீன் வளத்துறை உதவி இயக்குநா் யுவராஜ் தடை விதித்து உத்தரவிட்டாா். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி தொழில் நடைபெறவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை சகஜ நிலை திரும்பியதையடுத்து மீன்பிடி தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்டபிடிக்கச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT