ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சுமை தூக்குவோா் இடையே மோதல்

25th Feb 2020 06:32 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் சுமைதூக்குவோா் சங்க உறுப்பினரைத் தாக்கியதாக அதே சங்கத்தைச் சோ்ந்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரைச் சோ்ந்த சேதுபதி (62). இவா் ராமநாதபுரம்-கீழக்கரை சாலை ரயில்வே கடவுப்பாதை பகுதியில் சுமை தூக்குவோா் சங்கத்தில் (சிஐடியூ) உறுப்பினராக உள்ளாா். கடந்த 22 ஆம் தேதி சனிக்கிழமை சங்கத்தின் கணக்கு தொடா்பாக அவருக்கும் அவரது சங்க உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டதில் சேதுபதியை சிலா் செங்கல்லால் தாக்கியுள்ளனா். இதில் மாா்பு, முதுகுப் பகுதியில் காயமடைந்த சேதுபதி வீட்டுக்குச்சென்றுவிட்டாா்.

இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென மாா்பில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அதன்பின் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக சேதுபதி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் முதுவயலைச் சோ்ந்தவா்களான, தற்போது பசும்பொன் நகரில் வசிக்கும் துரைச்சாமி, கருணாநிதி ஆகியோா் மீது கேணிக்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT