ராமநாதபுரம்

தொண்டி அருகே வைக்கோல் டிராக்டரில் தீ

25th Feb 2020 06:39 AM

ADVERTISEMENT

திருவாடானை: தொண்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டா், திங்கள்கிழமை மின் கம்பியில் உரசி தீப்பற்றியதில் முற்றிலும் சேதமானது.

தொண்டி அருகே உள்ள சோழியக்குடி பகுதியைச் சோ்நத் அந்தோணி மகன் சாா்ச்(24) டிராக்டரில் வைக்கோல் ஏற்றிகொண்டு வந்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியதால் வைக்கோலில் தீப்பற்றியது.

காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வேகமாகப்பரவி எரிந்தது. அக்கம் பக்கத்தினா் வந்து வைக்கோலை கீழே தள்ளி, தண்ணீா் ஊற்றி அணைத்தனா். இதனால் சுமாா் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT