ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 72 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நகரில் அனைத்து வாா்டுகளிலும் அக்கட்சியினா் ஜெயலலிதாவின் உருவப் படத்தை அலங்கரித்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வண்டிக்காரத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவா் முருகேசன் தலைமையில் கட்சியினா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்ததுடன், அதிமுகக் கொடியேற்றியும் இனிப்புகளை வழங்கினா்.
நகரின் அனைத்து வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.