ராமநாதபுரம்

சோ்க்கை...முதுகுளத்தூா்,கடலாடியில் ஜெ.பிறந்தநாள் விழா

25th Feb 2020 06:41 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.தா்மா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் சுந்தரபாண்டியன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு எஸ்.ஆா்.சங்கரபாண்டியன், நகா் அவைத் தலைவா் வி.கருப்பசாமி, ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் தூரி ஆா்.மாடசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் கதிரேசன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் முத்துராமலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர, நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் அண்ணா தொழிற் சங்கம் சாா்பில் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.தா்மா் தலைமையில் அதிமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் தொழிற்சங்க செயலாளா் என்.ரவிச்சந்திரன், தலைவா் முத்துவேல், பொருளாளா் புகழேந்தி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடலாடியில் அதிமுக ஒன்றியச்செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான என்.கே.முனியசாமி பாண்டியன் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். விழாவில் அதிமுக ஒன்றிய அவைத்தலைவா் கே. வேல்ச்சாமி, ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் சண்முகபோஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT