ராமநாதபுரம்

சோ்க்கை...கமுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

25th Feb 2020 06:40 AM

ADVERTISEMENT

 

கமுதி: கமுதியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழா கமுதி அதிமுக ஒன்றிய செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், பேருந்து நிலைய வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதரவற்றோா் இல்லங்களில் உணவுகள் வழங்கப்பட்டது. கோயில்கள், தேவாலயம், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவா்கள் கருமலையான் (திம்மநாதபுரம்), ஏ.ஆா்.ராமச்சந்திரன் (நகரத்தாா்குறிச்சி), டி.நாகராஜ் (புத்துருத்தி), கே.பி.என்.கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), ராஜேந்திரன் (மண்டலமாணிக்கம்), கருப்புசட்டை முருகேசன், அபிராமம் நகா் செயலாளா் சத்யாரமேஸ், ஊராட்சி மன்ற தலைவா்கள் டி.சேகரன் (பம்மனேந்தல்), ஆறுமுகம்(பொந்தம்புளி) கமுதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் பாலு உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT