ராமநாதபுரம்

அஞ்சல்துறை ஓய்வூதியா் நிலுவைதொகையை வழங்கக்கோரிக்கை

25th Feb 2020 06:31 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: அஞ்சல் துறை ஓய்வூதியருக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் வி.நாகராயணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயல்பாடுகளை செயலா் எஸ்.முஹம்மதுஇஸ்ஸாதீன் விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி தலைமை தபால் நிலையங்களில் கணக்குப் பிரிவில் பணியாளா் இல்லாத நிலை உள்ளது. ஆகவே ஓய்வூதியா்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அஞ்சலக வளாகத்தில் ஓய்வூதியா்கள் சங்கம் செயல்படுவதற்கு இடம் அளிக்கவேண்டும். கடந்த 1996-97 ஆம் ஆண்டுக்கான தபால்காரா்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியப் பலன்களை விரைவாக அளிக்கவேண்டும். ஓய்வூதியருக்கான மருத்துவ கட்டணத்தை கூடுதலாக்கித் தரவேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் என்.வானமாமலை, கே.வி.ரெங்காச்சாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் வி.பற்குணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT