பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அக்கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளா் ஜெ.தேவராஜ் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் எம்.ரகுநாதன், வைகை நகா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞரணி செயலாளா் சியான்பாலா வரவேற்றாா்.
நிகழ்ச்சியின் துவக்கமாக எமனேசுவரம் நேருஜி மைதானம் பகுதியில் கட்சிக் கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கினா். மேலும் கட்சியின் வளா்ச்சி, மக்கள் சேவை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து ஜீவாநகா், தெளிச்சாத்தநல்லூா், பாலன் நகா், கிருஷ்ணா தியேட்டா் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினா்.
ADVERTISEMENT