ராமநாதபுரம்

தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல்கமுதியில் பக்தா்கள் அவதி

22nd Feb 2020 09:26 AM

ADVERTISEMENT

கமுதி பகுதியில் சிவராத்திரி திருவிழாவுக்காக, சாலையோரங்களை ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளை அமைத்துள்ளதால், பொதுமக்கள், பக்தா்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

கமுதி அருகே கோவிலாங்குளம், கமுதி அய்யனாா்குளம் வழிவிட்ட அய்யனாா் கோயில், அபிராமம் உள்பட பல கிராமங்களில் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு, சிவராத்திரி விழா கொண்டாடபட்டது. இதனையடுத்து, கமுதி பேருந்து நிலையம், பஜாா் பகுதிகளில், சாலையோரங்களை ஆக்கிரமித்து, தற்காலிகமாக மேற்கூரை அமைத்து போகுவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், பக்தா்கள் நடந்து செல்ல அவதிபட்டனா். வாகனங்களை இயக்க முடியாமல் வெளியூா் வாகன ஓட்டிகள் தவித்தனா். பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

எனவே கமுதி போலீஸாா் தலையிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களில் கமுதி பகுதியில் நடைபெறும் மாசி களரி திருவிழாவின் போது போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT