ராமநாதபுரம்

சாத்தான்குளம் பள்ளியில் தாய்மொழி தின விழா

22nd Feb 2020 09:27 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தாய் மொழி தின முக்கியத்துவத்தை ஆசிரியா் ஜெரோம் விளக்கி சிறப்புரையாற்றினாா். மாணவ, மாணவியருக்கு ஓவியம், கட்டுரை, வாசிப்புத் திறன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவா்கள் கமலக்கண்ணன், ந்தகுமாா், மாணவி சபா்மதி ஆகியோா் தமிழின் பெருமையை விளக்கும் கவிதை பாடினா். தமிழாசிரியா் சாம்ராஜ் வரவேற்றாா். சுவாமிதாஸ் நன்றி கூறினாா். முன்னதாக சாத்தான்குளம் பிரதான சாலைகளில் தாய் மொழி தின விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT