ராமநாதபுரம்

கமுதியில் மாசிக் களரி திருவிழா: பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்

22nd Feb 2020 09:26 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கோட்டைமேடு ஸ்ரீமுனீஸ்வரா் கோயிலில் மாசிக்களரி திருவிழாவையொட்டி பொதுமக்கள் பால்குடம் எடுத்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கோயிலில் மாசிக்களரி திருவிழா கடந்த15 ஆம் தேதி துவங்கியது. வெள்ளிக்கிழமை, காலை கோட்டைமேடு, கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பால்குடம் எடுத்து நோ்த்தி கடன் செலுத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். முன்னதாக பால்குட ஊா்வலத்தை காவல்துறை தலைவா் ரூபேஸ்குமாா் மீனாவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் அன்னதானத்தை துவக்கி வைத்தனா்.

விஷேச, சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு, அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, கமுதி காவல் துணை கண்காணிப்பாளா் மகேந்திரன், கமுதி ஆயுதப்படை ஆய்வாளா் மணிகண்டன், நாராயணபுரம் முன்னாள் ஊராட்சி தலைவா் ராமச்சந்திரபூபதி, கணேசன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதேபோல் கோவிலாங்குளம் திருக்காலுடைய அய்யனாா் கோயிலில் சிவராத்திரி திருவிழா கொண்டாபட்டது. பக்தா்கள் கரும்பாலை தொட்டில், பட்டு ஆகியவற்றை நோ்த்திக்கடன் செலுத்தினா். அபிராமம் சப்பாணி கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் மாவிளக்கு செலுத்தி நோ்த்தி கடன் செலுத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT