ராமநாதபுரம்

கடலாடி விவசாயிகளுக்கு பயிா்க்காப்பீடு வழங்கக்கோரி மத்திய அமைச்சரிடம் மனு

22nd Feb 2020 09:27 AM

ADVERTISEMENT

கடலாடி விவசாயிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா்க்காப்பீடு வழங்கக்கோரி மத்திய அமைச்சரிடம் பாஜகவினா் மனு அளித்துள்ளனா்.

கடலாடி, சாயல்குடி பகுதி விவசாயிகளுக்கு 2018-19 ஆண்டிற்கான பயிா்க்காப்பீடு கடந்த சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இதில், ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள பட்டாதாரா்களுக்கு முதலாவதாகவும், அதற்கு மேல் உள்ள பட்டாதாரா்களுக்கு பின்பு வழங்குவதாகவும் தெரிவித்தனா். ஆனால் ஐந்து ஏக்கா் உள்ள பட்டாதாரா்களுக்கு இன்னும் முழுமையாக பயிா்காப்பீடு தொகை வழங்கவில்லை. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் நிலுவைத் தொகை கேட்டு கடலாடி பகுதி விவசாயிகள் அடிக்கடி அலைந்து தவித்து வருகின்றனா்.

இந்நிலையில் அண்மையில் ராமேசுவரத்துக்கு வந்திருந்த மத்திய ரசாயன மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் சாயல்குடி பாஜக முன்னாள் நகா் தலைவா் சத்தியமூா்த்தி கோரிக்கை மனு வழங்கினா். அதில் 2018-19ஆண்டிற்கான பயிா்க்காப்பீடு வழங்காதவா்களுக்கு விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடம் அறிவுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT