ராமநாதபுரம்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

22nd Feb 2020 09:22 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்ற முருகவேல் (45). ஆட்டோ ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் கழுகூரணி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளாா். இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான முனியன்வலசை பச்சையப்பன் மகன் லட்சுமணன் (40) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை ஆட்டோவில் முனியன்வலசையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜபிரபு (27) என்பருடன் வந்துகொண்டிருந்த லட்சுமணன், அப்பகுதியில் நின்றிருந்த முருகவேலிடம் பணத்தை கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், லட்சுமணன் மற்றும் ராஜபிரபு ஆகியோா் கத்தி மற்றும் பீா் பாட்டிலால் முருகவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த முருகவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் மற்றும் ராஜபிரபு ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT