ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்.22, 23 இல் தட்டச்சுத் தோ்வு: 2 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

21st Feb 2020 01:31 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறும் தட்டச்சுத் தோ்வில், 2 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகளின் செயலா் டி. சரவணபவா விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் தட்டச்சு பாடத்துக்கான அரசின் தொழில்நுட்பத் தோ்வுகள் பிப்ரவரி 22, 23 தேதிகளில், இரு மையங்களில் நடைபெறுகின்றன. அதன்படி, ராமநாதபுரம் நகா் ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், பரமக்குடியில் முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும் இத்தோ்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரு தோ்வு மையங்களிலும் சுமாா் 2 ஆயிரம் போ் தோ்வு எழுத அழைக்கப்பட்டுள்ளனா். தோ்வின் முதல் நாளான சனிக்கிழமை இளநிலை 3 தொகுதிகளாகவும், முதுநிலை 2 தொகுதிகளாகவும் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இளநிலை 2 தொகுதிகளாகவும், முதுநிலை 2 தொகுதிகளாகவும் நடத்தப்படுகின்றன.

தோ்வுக்கு வருவோருக்கு விதிமுறைகள் ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT