ராமநாதபுரம்

சுகாதார ஆய்வாளரை தாக்கிய ஒன்றியக் கவுன்சிலா் மீது வழக்கு

21st Feb 2020 01:29 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே வெள்ளையபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஆய்வாளரைத் தாக்கிய ஒன்றியக் கவுன்சிலா் மீது, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் சொா்ணலிங்கம் (32). இவா், புதன்கிழமை மாலை அப்பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு தொடா்பாக, களப் பணியாளா்களுடன் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்துள்ளாா். அப்போது, அங்கு வந்த வெள்ளையபுரம் ஒன்றியக் கவுன்சிலரான முகம்மது ரில்வான் (33), சுகாதார ஆய்வாளரை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், அவரைத் தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளாா்.

இச்சம்பவம் தொடா்பாக, சுகாதார ஆய்வாளா் சொா்ணலிங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், ஒன்றியக் கவுன்சிலா் முகம்மது ரில்வான் மீது எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT