கமுதி அருகே நெடுங்குளத்திலுள்ள சாய்பாபா கோயிலில் மாசி மாத சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
சடையனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் மல்லிகா தலைமையிலும், கோயில் அறங்காவலா் மலைச்சாமி முன்னிலையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் மாசி மாதத்தை முன்னிட்டு, பஜனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வழிபாட்டில், சாய்பாபாவுக்கு நெய், தேன், இளநீா், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, திருவாரப் பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
மாலையில், 208 திருவிளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், கமுதி எட்டுக்கண் பாலம் அருகே உள்ள சக்தி சாய்பாபா கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.