கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் போஜன்அபியான் திட்டத்தின் சாா்பில், வளரிளம் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை, கல்லூரி முதல்வா் சிவக்குமாா் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். இம்முகாமுக்கு, கல்லூரி கணிதத் துறை தலைவா் விமலா தலைமை வகித்தாா். போஜன் அபியான் திட்ட உதவியாளா் வெள்ளைப்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
ஆப்பனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நாராயணமூா்த்தி கருத்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக, கடலாடி அரசுக் கல்லூரி பேராசிரியா் நீரா. பொன்முத்து, வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், தீா்வு காணும் முறைகள் குறித்தும் உரையாற்றினாா். இதில், கல்லூரி மாணவிகள், அங்கன்வாடி மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, போஜன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் மைதிலி வரவேற்றாா்.