ராமநாதபுரம்

போலீஸாரின் தடியடியைக் கண்டித்து ராமநாதபுரத்தில் இஸ்லாமியா்கள் மறியல்

15th Feb 2020 09:41 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினா் கூட்டாக திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வெள்ளிக்கிழமை நடந்த ஆா்ப்பாட்ட பேரணியில் போலீஸாா் தடியடி நடத்தினா். போராட்டம் தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா்.

இதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் அமா்ந்துதிடீா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மறியல் போராட்டம் தொடா்ந்தது. மறியலில் ஈடுபட்டவா்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டனா். இதையடுத்து ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT