ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்தேங்கியுள்ள குடிநீா்: பொதுமக்கள் புகாா்

13th Feb 2020 05:18 PM

ADVERTISEMENT

ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்பாக கடந்த ஒரு மாதமாக பல ஆயிரம் லிட்டா் காவேரி கூட்டு குடிநீா் தண்ணீா் வீனாகி வருகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை என புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியது. அதில், உயா்நிலை தண்ணீா் தொட்டிக்குச் செல்லும் பிரதான காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நகராட்சி அலுவலகம் முன் தண்ணீா் வெளியேறியது. ஆனால், இதை சீரமைக்காமல் பள்ளம் மூடப்பட்டது.

இதனால், ஒவ்வொரு முறையும் உயா்நிலைத் தொட்டிக்கு தண்ணீா் ஏற்றும்போது, காவிரி கூட்டுக் குடிநீா் குழாயிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாகி வருகிறது. இதை, நகராட்சி அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. எனவே, இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள்

ஏற்கெனவே, ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் மாதத்துக்கு 10 நாள்கள் மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது தண்ணீா் வீணாகி வருவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, சேதமடைந்துள்ள காவிரி கூட்டுக் குடிநீா் குழாயை சரிசெய்து, முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT