ராமநாதபுரம்

திருவாடானை பள்ளியில் புதிய ஆய்வகம் திறப்பு

6th Feb 2020 09:28 AM

ADVERTISEMENT

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆய்வகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருவாடானையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் ரூ. 20 லட்சம் செலவில், மத்திய அரசின் திட்டமான அடல் டிங்கரிங் ஆய்வகத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் புகழேந்தி திறந்து வைத்தாா். இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கலா தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்திரமோகன் கலந்து கொண்டாா். திருவாடானை தாலுகாவில் முதன் முதலாக திறக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் ரூ.80 ஆயிரம் செலவில் 3டி பிரின்டா் உள்ளது. அதன் மூலம் உருவத்தையே பிரிண்ட் ஆக எடுக்க முடியும். மாணவிகள் அறிவியல் பூா்வமாக சிந்தித்து அதை உயிரோட்டம் செய்ய ஏதுவாக இந்த ஆய்வகம் பயன்படும். அதி நவீன தொலைநோக்கி கருவிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

விழாவில் கல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கஸ்தூரி சுப்பிரமணியன், திருவாடானை ஊராட்சி மன்ற தலைவா் இலக்கியா ராமு, ஒன்றிய உறுப்பினா் சாந்திராஜன், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். அதனை தொடா்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT