முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தில் புதன்கிழமை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
முதுகுளத்தூா் வட்டம் காக்கூா் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நாகூா் ஆண்டவா் சந்தனக்கூடு திருவிழாவுக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தன செம்பு ஊா்வலமாக முக்கிய வீதிகளில் சென்று தா்ஹாவை வந்தடைந்தது. விழாவில் புதன்கிழமை சந்தனக்கூடு கொடி இறக்கம் செய்து தப்ரூக் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காக்கூா் கிராமத்தினா் செய்திருந்தனா்.