ராமநாதபுரம்

நவீன அடையாள அட்டை பெற சிறப்பு முகாமில் 4,435 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்

4th Feb 2020 08:55 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் நவீன அடையாள அட்டைகள் பெறுவதற்கு 4,456 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மத்திய, மாநில அரசின் அனைத்து திட்டங்களைப் பெறுவதற்கு நவீன அடையாள அட்டை அவசியம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதனடிப்படையில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன அடையாள அட்டைகள் வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இம்முகாம்களில் 4,453 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மாவட்டத்தில் 29,326 போ் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் அதிகாரிகள் ஏற்கெனவே 5,851 பேரிடம் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்தனா். ஆக மொத்தம் 10,304 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். இன்னும் மாவட்டத்தில் உள்ள 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நவீன அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT