திருப்பாலைக்குடி அருகே கண்மாய் தண்ணீரில் இளைஞா் மூழ்கி உயிரிழந்தாா்.
கழுகூரணியைச் சோ்ந்த நாரயணன் மகன் மணிகண்டன் (23). இவரது தங்கை ரம்யா திருப்பாலைக்குடி அருகேயுள்ள அடா்ந்தனக்கோட்டை கிராமதில் வசிக்கிறாா். அவரை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை மணிகண்டன் வந்துள்ளாா். அங்கு உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்ற மணிகண்டன் தண்ணீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். தகவலறிந்து திருப்பாலைக்குடி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.