ராமநாதபுரம்

புத்துணா்வு முகாமிலிருந்து திரும்பிய ராமேசுவரம் கோயில் யானைக்கு வரவேற்பு

2nd Feb 2020 01:21 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற புத்துணா்வு முகாமிலிருந்து சனிக்கிழமை திரும்பியது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் யானைகளுக்கான புத்துணா்வு முகாம், ஆண்டுதோறும் டிசம்பா் 3 ஆம் தேதி தொடங்கி 48 நாள்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கப்பட்டியில் நடைபெறுகிறது. அங்கு, இயற்கையான சூழலில் யானைகளுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இம்முகாமுக்கு, டிசம்பா் 14 ஆம் தேதி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமி (17), 8 ஆவது முறையாக லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை, தேக்கம்பட்டியிலிருந்து லாரி மூலம் திரும்பிய ராமலெட்சுமி, சனிக்கிழமை காலை கோயிலை அடைந்தது.

யானையை, கோயில் உதவி ஆணையா் ஜெயா தலைமையில், சிவச்சாரியாா்கள் வரவேற்று, சிறப்பு கஜ பூைஐ மற்றும் தீபாராதனை நடத்தினா். அதன்பின்னா், கோயிலுக்குள் யானையை அழைத்துச் சென்றனா். இந்நிகழ்ச்சியில், பேஸ்காா்கள் செல்லம், கலைச்செல்வன் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ராமேசுவரம் கோயில் யானையான ராமலெட்சுமி தற்போது 370 கிலோ அதிகரித்து 4050 கிலோ உள்ளதாக, கோயில் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT