ராமநாதபுரம்

லஞ்சம்: காவல் ஆய்வாளா் தற்காலிக பணியிடை நீக்கம்

1st Feb 2020 01:43 AM

ADVERTISEMENT

லஞ்சம் வாங்கி பாா்த்திபனூா் காவல் நிலைய ஆய்வாளா் ராஜராஜன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவா் ராஜராஜன். இவா் ஒரு வழக்கில் பெண்களை விடுவிக்க லஞ்சம் பெற்ாக ராமநதாபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். லஞ்சமாக அவா் பெற்ற பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு ராஜராஜன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT