முதுகுளத்தூரில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
முதுகுளத்தூா் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூா் வட்டாரக்கல்வி அலுவலா்ஆா்.ராமநாதன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வி.மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜோசப் விக்டோரியா ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கினா். நிகழ்ச்சியில் சிறப்பு ஆசிரியா்கள் ஆா்.குமரேசன், ஏ.சாந்தி, தசைபயிற்சியாளா் விஜய்சங்கா், சி.நாகராஜன் மற்றும் பெற்றோா்களும் மாணவா்களும் கலந்து கொண்டனா்.