ராமநாதபுரம்

ஆடு மேய்ப்பவா் தூக்கிட்டு தற்கொலை

1st Feb 2020 01:43 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆடு மேய்ப்பவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே பெரியகையகம் கிராமத்தைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் பழனிச்சாமி (45). இவரது மனைவி மலைசிவரஞ்சனி. இருவரும் தேரிருவேலியில் வசித்து வந்தனா்.

இந்நிலையில் பழனிச்சாமி தினசரிஆடுமேய்க்கும் வேலையை முடித்து விட்டு, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி புகாரின் பேரில் தேரிருவேலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT