ராமநாதபுரம்

வாலிநோக்கம் கடற்கரையில் இறந்த நிலையில்கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்

30th Aug 2020 10:03 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா், ஆக. 30: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடற்கரையில் சுமாா் 7 டன் 700 கிலோ எடையுள்ள ராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.

இந்த திமிங்கிலத்தின் உடலை மன்னாா் வளைகுடா தேசிய உயிரின பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு ஆய்வு செய்தனா். அப்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பலவீனமாக இருந்த திமிங்கிலம் மூச்சு திணறல் ஏற்பட்டு பாறைகளில் மோதி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னா் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீனவா்களின் உதவியுடன் இறந்த திமிங்கிலத்தின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவா் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு கடற்கரை அருகில் புதைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT