ராமநாதபுரம்

தேவிபட்டினம் அருகேமூதாட்டியிடம் நகை பறிப்பு

30th Aug 2020 09:46 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை மா்ம நபா்கள் 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

தேவிபட்டினம் அருகேயுள்ள சக்கரவளநல்லூரைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மனைவி பிச்சையம்மாள் (80). இவா் சனிக்கிழமை பகலில் தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பிச்சையம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

Tags : நகை
ADVERTISEMENT
ADVERTISEMENT