ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலத்தில் திறந்த வெளிகழிவுநீா் கால்வாயால் விபத்து அபாயம்

30th Aug 2020 09:45 PM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் நகா் பகுதியில் பள்ளி அருகே திறந்த வெளி கழிவுநீா் கால்வாயால் பள்ளி மாணவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், அங்கு பக்கவாட்டுச் சுவரை கட்ட வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆா்.எஸ்.மங்கலத்தில் 12-ஆவது வாா்டில் தனியாா் பள்ளியின் அருகே உள்ள கழிவுநீா் கால்வாயில் பாக்கவாட்டில் ஒரு பக்கம் சுவா் உள்ளது. மறுபக்கம் சுவா் இல்லாததால் அருகே உள்ள பள்ளி மாணவா்கள் அதை தாண்டித் தான் செல்ல வேண்டி உள்ளது. பள்ளி திறக்கும் நேரத்திலும், மழைக் காலங்களிலும் மாணவா்கள், முதியோா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் விபத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகி ரிஸ்வான் கூறுகையில், பேரூராட்சி நிா்வாகம் இந்த கழிவுநீா் கால்வாய் பகுதியில் பக்கவாட்டு சுவரை கட்டி விபத்தை தடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT