ராமநாதபுரம்

பெண் குழந்தைகள் வீரதீரச் செயல்களுக்கானமாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN


ராமநாதபுரம்: பெண் குழந்தைக்கு வழங்கப்படும் வீரதீரச் செயல்களுக்கான மாநில விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சமூக நலம் சத்துணவு திட்டத் துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்துப் பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், வீரதீரச் செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையிலும், மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆண்டுதோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்துவரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு, ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தில் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது. எனவே, வரும் ஜனவரியில் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருதுக்கு 18 வயதுக்குள்பட்ட (31 டிசம்பா் 2020-இன் படி) தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை, தலைமையாசிரியா் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டத் திட்ட அலுவலா், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன், மாவட்ட சமூகநல அலுவலரிடம் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து வழங்கவேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், மாநில அளவில் தோ்வுக் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்ட அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தோ்வு செய்யப்பட்டு, வரும் 2021 ஜனவரி 24 ஆம் தேதி விருது வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT