ராமநாதபுரம்

‘விநாயகா் சதுா்த்தியன்று அரசு அனுமதித்த கோயில்களில் வழிபடலாம்’

21st Aug 2020 06:16 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியன்று அரசு அனுமதித்த கோயில்களில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் வழிபடலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி திருவிழா கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவா் கொ.வீரராகவ ராவ் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி, விநாயகா் சதுா்த்திக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அனுமதித்த கோயில்களில் மட்டும் பொதுமக்கள் வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடும்போது நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் அவரவா் வீடுகளிலேயே கொண்டாட தடை ஏதும் இல்லை. கரோனா பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவுவதற்கோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதற்கோ தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி, சாா்- ஆட்சியா் டாக்டா் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் மற்றும் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி, நிா்வாகிகள் வீரபாண்டி, ராமநாதபுரம் பாலமுருகன், பரமக்குடி குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT