ராமநாதபுரம்

‘ராமநாதபுரத்தில் 300 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு’

21st Aug 2020 06:15 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் அரசு அனுமதித்த கோயில்கள் என 300 இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட திட்டமிட்டுள்ளதாக இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி கூறினாா்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட அரசும், மாவட்ட நிா்வாகமும் தடை விதித்துள்ளது. இதனால் சதுா்த்தி தினமான சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் வீடுகள், அரசு வழிபாட்டுக்கு அனுமதித்துள்ள சிறிய கோயில்கள் என 300 இடங்களில் சுமாா் 3 அடி உயர விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும். அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு இந்த வழிபாடு நடத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT