ராமநாதபுரம்

‘நீதிமன்ற உத்தரவுக்குப்பின் 2,500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் அழிக்கப்படும்’

21st Aug 2020 06:15 AM

ADVERTISEMENT

கமுதியில் தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்டு வரும் 2,500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் (வெடிபொருள்) நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என்று கியூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக கடந்த 2007 ஆண்டு இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் எனப்படும் வெடி பொருளை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். பரமக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது. ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல் முறையீட்டு வழக்கும் கடந்த மாா்ச் மாதம் முடிவடைந்தது.

இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 மூட்டை (2,500 கிலோ) பொட்டாசியம் நைட்ரேட் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து பாதுகக்கப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கு முடிவடைந்த நிலையில், அந்த வெடி பொருள்களை அழிக்க நீதிமன்ற உத்தரவிற்காக போலீஸாா் காத்திருக்கின்றனா்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின் சென்னை வெடி பொருள் கண்டறிதல் மற்றும் அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் இந்த வெடி பொருள்கள் அழிக்கப்படும் என்று கியூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கமுதி தனி ஆயுதப்படை போலீஸாா் கூறுகையில், வெடி பொருள்கள் பாதுகாப்பான அறையில் உள்ளன. அழிப்பது தொடா்பான உத்தரவு இதுவரை, தனி ஆயுதப்படை அலுவலகத்திற்கு வரவில்லை என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT