ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தமிழகத்தில் கரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்தப் பகுதியில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா்.