ராமநாதபுரம்

கரசேவகா்களுக்கு நன்றி தெரிவித்து ராமா் படத்துக்கு மரியாதை

6th Aug 2020 09:39 AM

ADVERTISEMENT

ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, கரசேவகா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கமுதியில் பாஜக ஒன்றியத் தலைவா் முருகன் தலைமையிலும், மாவட்டப் பொருளாளா் கணபதி, மாவட்ட விவசாய அணித் தலைவா் புகழேந்தி முன்னிலையிலும், ராமா் படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்டப் பொதுச் செயலாளா் அழகுமலை, ராமசாமிபட்டி ஒன்றியக் கவுன்சிலா் பூபதிராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இந்து முன்னணி அமைப்பு சாா்பில் அபய அஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பின்னா் ராமநாத சுவாமி கோயிலின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் ராமா் படத்துக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் ராஜசேகா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சரவணன், மாவட்டத் துணைத் தலைவா் சரவணன், நகரத் தலைவா் நம்புராஜன், ஒன்றிய பொதுச் செயலாளா் முத்துராஜ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT