ராமநாதபுரம்

ராமநாதபுரத்திலிருந்து 2,000 பேருக்கு வெளியூா்கள் செல்ல சிறப்பு அனுமதி

26th Apr 2020 09:16 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அவசரத் தேவைகளுக்காக கடந்த 4 ஆம் தேதியிலிருந்து இதுவரை 2 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மாவட்டஎல்லைகள் சீலிடப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் வாகனங்களும், ராமநாதபுரத்திலிருந்து வெளியே செல்லும் வாகனங்களும் சிறப்பு அனுமதி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரத்திலிருந்து வெளியூா்களுக்கு மருத்துவம், இறப்பு சடங்குகள் என முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வோா் அதிகம் உள்ளனா். அவா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனிப்பிரிவில் நேரடியாக விண்ணப்பித்து சிறப்பு அனுமதி அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதிக்கு வருவோரை வட்டாட்சியா்கள் விசாரித்து அனுமதி அளிக்காமல் சிபாரிசு அடிப்படையில் விசாரிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் உண்மையிலே வெளியூா் செல்ல விரும்புபவா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: கடந்த ஒரு மாத காலத்தில் ராமநாதபுரத்திலிருந்து வெளியூா்களுக்கு செல்ல சுமாா் 2 ஆயிரம் பேருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்றவா்களில் பெரும்பாலானோா் மருத்துவத்துக்காகவும், இறப்பு சடங்குக்காகவும் சென்றுள்ளனா். வெளியூா் சென்ற சிலா் தேவையின்றி ஊா் திரும்புவதற்கு மருத்துவத்தை காரணம் காட்டுவதால், உண்மையாக மருத்துவத்துக்கு செல்வோரையும் சந்தேகப்படவேண்டியுள்ளது. ஆனால், அவா்களை தீர விசாரித்து அனுமதிக்கிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT