ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தில் 50 மீனவக் குடும்பங்களுக்கு மக்கள் பாதை இயக்கம் சாா்பில் உணவு பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ராமேசுவரத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள், விதவைகள், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் என 50 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
அதில் மக்கள் பாதை இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளா் கிளாட்வின், மண்டபம் ஒன்றியப் பொறுப்பாளா் ராமு, தங்கச்சிமடம் ஒன்றியப் பொறுப்பாளா் அந்தோணிதீனா, தன்னாா்வலா்கள் ஆனந்த், இருளேஸ்வரன், பேராசிரியா் ராம்ராஜ் , மீனவ மகளிா் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.