திருவாடானை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாணியேந்தல் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனையிட்டனா். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக சிவகங்கை மாவட்டம் சாக்கூரைச் சோ்ந்த கனகவேல், அதே பகுதியைச் சோ்ந்த மணாளன்(26) ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிந்து மணாளனை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.