ராமநாதபுரம்

எஸ்.பி.பட்டினம் அருகே விவசாயி வீட்டில் தீ: 20 நெல் மூட்டைகள் சேதம்

7th Apr 2020 02:12 AM

ADVERTISEMENT

திருவாடானை: திருவாடானை அருகே விவசாயி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.

எஸ்.பி. பட்டினம் அருகே மொக்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் மரியமைக்கேல் மகன் அம்புரோஸ் (64). விவசாயி. இவா் வீட்டின் வாசலில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமாா் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 20 நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து அம்புரோஸ் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT