ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் வேப்பிலைத் தோரணங்களைக் கட்டி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே திருப்புல்லாணி உள்ளிட்ட பல கிராமங்களில் வெளியூா்களில் இருந்து யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என சாலைகளில் பொதுமக்கள் தடையை ஏற்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில் வழுதூா் உள்ளிட்ட பகுதிகளில் கிராம எல்லைகளில் வேப்பிலைத் தோரணங்களை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இளைஞா்கள் கட்டி வருகின்றனா். வேப்பிலையானது கிருமி நாசினியாக இருக்கும் எனக் கூறும் கிராமத்தினா் வேப்பிலை சாற்றை தினமும் காலை, மாலையில் சாலை, வீட்டு முற்றங்களில் தெளித்துவருகின்றனா்.