ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்துகட்டடத் தொழிலாளி பலி

7th Apr 2020 02:09 AM

ADVERTISEMENT

கமுதி: கமுதி அருகே கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கமுதி அருகே கண்ணாா்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (55). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அருகேயுள்ள பொது குளியல் தொட்டியில் குளித்துவிட்டு, தனது வீட்டிலுள்ள தகர சீட்டில் துணியை உலரப் போட்டாா். அப்போது, ஏற்கெனவே தகரத்தில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT